வலைதளத்தில் இருக்கும் வசதிகள்
 • ஒரு புத்தகக் காட்சிக்குச் சென்று புத்தகங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வாங்குவது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும்.
 • வலை தளத்திற்குள் ஒவ்வொரு பதிப்பாளருக்கும் தனித் தனியாக வலைப்பக்கங்கள் இருக்கும். ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கும்போது வாசகர் விரும்பினால் அதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின்(றீவீஸீளீ) மூலம் அந்தப் பதிப்பகத்தின் வலை தளத்திற்குச் சென்று மற்ற வெளியீடுகளையும் பார்வையிடலாம்.
 • அதில் ஒவ்வொரு புத்தகத்தின் முன்னட்டை மற்றும், பின் அட்டையின் படத்துடன் அவற்றின் விவரங்களும் பதிப்பாளரின் முழு முகவரி மற்றும் / பதிப்பகத்தைப் பற்றிய விவரங்களும் இடம் பெறும்.
 • வலைதளத்தில் இடம்பெற்ற அத்தனை புத்தகங்களின் விவரங்களும் பொதுவான பட்டியலிலும் ஒவ்வொரு புத்தகத்தின் முன்னட்டை மற்றும், பின் அட்டையின் படத்துடன் அவற்றின் விவரங்கள் பதிப்பாளரின் முழு முகவரி மற்றும் / பதிப்பகத்தைப் பற்றிய விவரங்களுடனும் இடம் பெறும்.
 • வலைதளத்தில் அத்தனை புத்தகங்களின் விவரங்களும் ஆசிரியர் வாரியாகவும் பிரிவு வாரியாகவும் கூட இடம் பெறும்.
 • பதிப்பாளரது முழு விலைப்பட்டியலும் றிஞிதி வடிவில் அவர்களது வலைதளத்தில் மட்டும் இடம் பெறும் (அவர் இந்த வலைதளத்தில் பார்வைக்கு வைக்காத நூல்கூட அதில் இருக்கலாம்). அதைத் தரவிரக்கம் செய்யக்கூடிய வசதி இருக்கும்.
 • இந்த வசதியைச் செய்து கொடுக்கும்போது வலைதளத்தில் அதற்கு எவ்வளவு இடம் தேவைப்படுகிறது என்பதைப் பொருத்துக் கட்டணம் நிர்ணயிக்கப்படும். அதிக எண்ணிக்கையில் புத்தகங்களைப் பதிவேற்றுபவர்களுக்கு ஒரு புத்தகத்திற்கான கட்டணம் குறையும். ஒரு லிவீஸீளீ ஐ சிறீவீநீளீ செய்தால் அவர்கள் நிறுவனத்தின் வலைதளத்திற்கு சென்று பார்க்கக் கூடிய வசதி செய்து தரப்படும்.
 • பதிப்பாளர்களுக்கு இதுவரைத் தனியாக வலைதளம் இல்லாதிருந்தால் அவர்கள் விரும்பினால் அதை வடிவமைத்துத் தருவதற்கான தொழில் நுட்ப வல்லுநர்கள் குழுவை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து தொழில் நுட்ப வசதி அவர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
 • வலைதளத்திலுள்ள பதிப்பாளரது புத்தகங்களை ஒருவர் வாங்க விரும்பித் தேர்வு செய்தவுடனேயே அந்தத் தகவல் அவர்களுக்கு மின்னஞ்சல்... குறுஞ்செய்தி... கட்செவி அஞ்சல் இவை ஏதாவதொன்றின் வழி பதிப்பாளருக்குத் தெரிவிக்கப்படும். (அவர்கள் அதைத் தினமும் பார்த்து வர வேண்டும்.)
 • றிக்ஷீஷீயீமீssவீஷீஸீணீறீ சிஷீuக்ஷீவீமீக்ஷீ அல்லது வேறு ஏதாவது ஒரு கூரியர் நிறுவனத்துடன் மற்றும் மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ சிஷீuக்ஷீவீமீக்ஷீ பார்சல் நிறுவனத்துடன் நமக்கு ஒப்பந்தம் இருக்கும். அவர்கள் வழியாகவும் அனுப்பலாம். அல்லது இந்தியத் தபால்த் துறை மூலம் அல்லது பதிப்பாளருக்கு எது வசதியோ அந்த முறையில் அல்லது வாசகர் விரும்பும் முறையில் புத்தகத்தை அனுப்பலாம்.
 • இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள அனைவருக்கும் அந்த நிறுவனத்தால் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க கூரியர் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
 • அஞ்சலகத்தில் வி.பி.பி.யில் அனுப்பும்போது அதற்கான பணத்தைப் புத்தகத்தைப் பெற்றுக் கொள்பவரிடமிருந்து வாங்கிப் பதிப்பாளர்களிடம் கொடுக்கும் வசதி இருப்பதைப் போன்றே இவர்களிடம் சி.ளி.ஞி. (சிணீsலீ ளிஸீ ஞிமீறீவீஸ்மீக்ஷீஹ்) என்ற வசதி இருக்கும்.
 • தூதஞ்சல் நிறுவனத்திலிருந்து பதிப்பாளர் இருக்கும் இடத்திற்கே வந்து புத்தகங்களை வாங்கிக் கொள்வதற்கு வசதி செய்து தரப்படும்.
 • அனுப்பும் அஞ்சல் கட்டணங்களுக்கான பட்டியல் தொகையை மாதத்திற்கு ஒரு முறை மொத்தமாக வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
 • கூரியர் வாங்கிச் செல்ல அந்த நிறுவனத்திலிருந்து ஆள்கள் வரும்போது பார்சல் தயாராக இல்லையெனில் அந்தப் பகுதியிலுள்ள அவர்கள் அலுவலகத்தில் கொண்டு போய்க் கொடுத்தால் முடிந்தவரை அன்றைக்கே அனுப்ப அறிவுறுத்தப்படும்.
 • வலைதளத்திற்குக் கட்டணம் செலுத்துபவர்களுக்கு ஒரே மாதிரி லேபிளும், பேக்கிங் அட்டையும் அடித்துக் கொடுக்கப்படும். அதை அனைவரும் பயன்படுத்துவதன் மூலம் நம் பார்சல் தனித்துவமாகத் தெரியும். அதுவே நமக்குப் பெரிய விளம்பரமாக உதவும்.
 • ஒரு வாசகர் ஒவ்வொரு நிறுவனத்தின் புத்தகத்தையும் தனித்தனியாக வாங்கினால் அனுப்பும் கட்டணம் அதிகமாகும், ஒரே நேரத்தில் கிடைக்காது. அதனால் ஒன்றாகச் சேர்ந்து கிடைத்தால் தனக்கு வசதியாக இருக்கும் என்று கருதினால் அல்லது நாங்களே வாங்கி அனுப்புவது நல்லது என்று நிர்வாகத்திற்குத் தோன்றினால் அப்படி அனுப்ப ஏற்பாடு செய்வோம்.
 • நிஷிஜி சேர்த்து பட்டியலிடப்பட வேண்டிய ஒலிப்புத்தகம், மின் புத்தகம் இவற்றிற்குத் தனியாக ஒரு நிறுவனத்தை நியமித்து அவர்கள் மூலம் வாசகர்களிடம் சேர்ப்பிக்கவும் அவர்களிடமிருந்து தொகையைப் பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
 • பலரிடம் புத்தகங்களை வாங்கி மொத்தமாக அனுப்பும்போது அந்தந்த நிறுவனங்களுக்குச் சேர வேண்டிய பணம் அவரவர்கள் வங்கிக் கணக்கில் தனித்தனியாய் போய்ச் சேர ஏற்பாடு செய்யப்படும்.
 • பத்திரிகைகளின் சந்தா கூட இதில் சேரலாம்.
 • புத்தகம் பற்றிய உலகச் செய்திகள் வலை தளத்தில் இடம்பெறும்.
 • புத்தக விமரிசனத்திற்கென்று ஒரு தனிப் பகுதி இருக்கும். இந்த வலை தளத்தில் இடம் பெற்றுள்ள புதிய புத்தகங்களின் விமர்சனங்கள் எங்கு வெளிவந்திருந்தாலும் அதில் இடம் பெற ஏற்பாடு செய்யப்படும். புத்தகங்களைப் பற்றிய விமர்சனம் ஏதாவது வந்திருந்து அது பதிப்பாளரால் யூனிகோட் அச்சுரு மூலம் பிழையில்லாமல் தட்டச்சு செய்யப்பட்டு புத்தகத்தின் அட்டைப் படத்துடன் அனுப்பப்பட்டால் இடம் பெறச் செய்யப்படும். இது 15 நாட்கள்வரை வலைதளத்தில் இருக்கும்.
 • ஒவ்வொரு புதுப்புத்தகம் வெளிவரும் போதும் அதைப் பதிவேற்றியவுடன் புதுப்புத்தகம் என்ற இடத்தில் அதைப்பற்றி அறிவிப்பு வெளியிடப்படும். 15 தினங்கள் வரை அது அங்கு இருக்கும்.
 • தங்கள் புத்தகங்களைத் தனிப்பட்ட முறையில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விளம்பரத்தை அவர்களே வடிவமைத்துத் தர வேண்டும். அதை விளம்பரப்படுத்தத் தனிக் கட்டணம் தர வேண்டும். (குறைந்தது ஒரு மாதத்திற்கு) ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயிக்கப்படும்.
 • இதில்...
 • வெறும் யிறிநி மட்டும் & மற்றும் எழுத்துக்களாக மட்டும்
 • ஒலியோடு கூடிய விளம்பரம்
 • ஒளியும் ஒலியும் சேர்ந்த விளம்பரம் இதில் இவை வலைதளத்தில் எடுத்துக் கொள்ளும் இடத்திற்கேற்றவாறு கட்டணம் செலுத்த வேண்டும்.
 • புத்தகம் பற்றிய உரையாடல்கள் & புத்தக ஆசிரியர்களின் உரைவீச்சுக்கள் இடம் பெற வேண்டுமென்று பதிப்பாளர் விரும்பினால் உரிய கட்டணத்துடன் ஆட்சேபகரமான செய்திகள் இல்லாத நிலையில் இடம் பெற ஏற்பாடு செய்யப்படும். இல்லையெனில் லிவீஸீளீ மட்டும் கொடுக்கப்படும்.
 • இனி வர இருக்கும் புத்தகங்களைப் பற்றிய விளம்பரங்கள் இடம் பெற & தனிக்கட்டணம் செலுத்தினால் ஏற்பாடு செய்யப்படும்.
 • பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களையோ தாங்கள் பதிப்புரிமை பெற்ற புத்தகங்களையோ வலைதளத்தில் காட்சிக்கு வைக்கலாம். அதற்குரிய கட்டணங்கள் தனியாக இணைக்கப்பட்டுள்ளது. தாங்கள் கொடுக்கும் புத்தகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் கட்டணங்கள் மாறும்.
 • இந்திய மொழி நூல்கள் ஆங்கில மொழிப் புத்தகங்கள் என எல்லாவற்றிற்கும் ஒரே தனிக் கட்டணம்தான்.