பயன்கள்
 • ஒரு புத்தகக் காட்சிக்குச் சென்று புத்தகங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வாங்குவது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும்.
 • தங்களுக்கென்று தனி அலுவலகமோ, காட்சிக்கூடமோ விற்பனை நிலையமோ இல்லையென்ற குறையை நிவர்த்தி செய்யும்.
 • தாங்கள் பார்வைக்கு வைக்க விரும்பும் அத்தனை புத்தகங்களையும் பார்வைக்கு வைக்கலாம்.
 • அதிக அளவில் விற்பனையாகும் புத்தகங்களை மட்டும் வாங்குவது, தங்கள் சொந்த வெளியீடுகளை மட்டும் முன்னிறுத்துவது, அவற்றை மட்டும் பார்வையாளர்களுக்குக் காண்பிப்பது, தங்களுக்கு அதிகக் கழிவு தரும் பதிப்பாளர்களின் புத்தகங்களின் புத்தகங்களை விற்பதற்கு முன்னுரிமை கொடுப்பது, அறிமுகமில்லாதவர்களின் புத்தகத்தை வாங்காமல் & அதன் தரமும் முக்கியத்துவமும் தெரியாததால் புறக்கணிப்பது இவை காரணமாகத் தங்கள் வெளியீடுகள் வெளி உலகத்தின் பார்வைக்கே வராமல் இருக்கலாம். அதைத் தவிர்க்க தங்களைப் போன்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 • தங்கள் வெளியீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது அவற்றைத் தருவிக்க அதிக செலவாகும் அல்லது தேவை ஏற்படும்போது தங்களால் உடனடியாக அனுப்ப முடியாது என்பதால் விற்பனையாளர்கள் தங்கள் புத்தகங்களை விற்பதற்குத் தயங்கலாம். தவிர்க்கவும் செய்யலாம். தங்களுக்கு எங்கள் திட்டம் உதவியாக இருக்கும்.
 • உலகின் எல்லா மூலைகளுக்கும் உங்கள் புத்தகத்தைப் பற்றிய விவரங்கள் சென்றடையும். விற்பனையும் சாத்தியமாகும்.
 • விற்பனைப் பணம் நேரடியாகத் தங்கள் வங்கிக் கணக்கிற்கே வந்து சேரும்.
 • எங்களுடைய தொழில் நுட்ப உதவி கிடைக்கும்.
 • கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான வாடகை செலவு மிச்சமாகும்.
 • கண்காட்சியில் கலந்துகொள்ள அனுமதி கிடைக்குமா என்ற பதற்றம் வேண்டாம்.
 • அதற்கான போக்குவரத்து, தங்கும் செலவுகள், பணியாளர் சம்பளம் போன்றவை பெருமளவு குறையும்.
 • இயற்கைச் சீற்றங்கள் மற்றும் போக்குவரத்தால் புத்தகங்கள் பாழாவது, திருட்டுப் போவது போன்றவை தவிர்க்கப்படும்.
 • இதில் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
 • தாங்கள் இந்த முறையின் மூலம் 10% கழிவு தரப்போகிறீர்கள். தங்கள் புத்தகங்களுக்கு 30% வியாபாரக் கழிவு தரத் தாங்கள் தயாராக இருக்கும் நிலையில் இதனால் 20% மிச்சமாகும்.
 • தாங்கள் ரூ. 5000 கொடுத்து இந்தத் திட்டத்தில் இணைந்து உங்கள் புத்தகங்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள் என்றால் தங்கள் நூல்கள் ரூ. 25,000க்கு விற்றாலே அந்தப் பணத்தை எடுத்து விடலாம் (ரூ. 25,000 ஜ் 20% = ரூ.5000). ஒரு வருடத்தில் இந்தத் தொகைக்கு நிச்சயம் விற்கும்.
 • அளவில் எவ்வளவு பெரிய புத்தகம் என்றாலும் எவ்வளவு பக்கங்கள் உள்ள புத்தகங்கள் என்றாலும் எவ்வளவு அதிகமான விலையுள்ள புத்தகம் என்றாலும் ஒரே கட்டணம் தான்.
 • ஒரு புத்தகத்தை வெளியிட்ட உடனேயே அது குறித்த தகவல்கள் உடனே பல்லாயிரக்கணக்கானவர்களுக்குத் தெரியவும் ஒரே சமயத்தில் எல்லோருக்கும் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய முடியும்.
 • முதல் கட்டமாகத் தமிழகம் முழுவதிலுமுள்ள முக்கியமான விற்பனையாளர்கள் அனைவரின் விவரங்கள் முழுமையாக வலை தளத்தில் பார்வைக்கு வைக்கப்படும். இதன் மூலம் அவர்கள் மூலமாகவும் தங்கள் புத்தகங்களை விற்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
 • தங்கள் புத்தகங்களை விற்பனை செய்யும் முகவர்களின் முகவரிகளைத் தந்தால் அவற்றையும் பதிவேற்றலாம். தங்களுக்கும் அந்த விற்பனையாளருக்கும் சுமுகமான வியாபார உறவு இருக்கும் நிலையில் அவருக்கு அருகிலுள்ள வாசகர்களை அவரிடமே புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளச் சொல்லலாம். இதன் மூலம் உங்கள் புத்தகங்களை அந்த விற்பனையாளர் அதிக அளவில் வாங்க வாய்ப்பு ஏற்படும்.
 • ளிஸீ-றீவீஸீமீ விற்பனை முகவர்களின் முகவரிகள் வலை தளத்தில் இருக்கும். அவர்களிடம் ஆர்டர் செய்தும் தங்கள் புத்தகங்களை வாங்குங்கள் என்றும் சொல்லலாம்.
 • மாதம் ஒரு மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து அந்த மாவட்டத்தில் உள்ள வாசகர்களுக்குச் சிறப்புக் கழிவு தர ஏற்பாடுகள் செய்யப்படும். அந்த ஊரிலுள்ள குறிப்பிட்ட ஒரு சில கடைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் நமது வலை தளத்திலுள்ள புத்தகங்களை வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
 • நமது வலை தளம் குறித்த தகவல்கள் & இதன் இணைப்பு (லிவீஸீளீ) புத்தகத் துறை சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும், கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும், விற்பனையாளர்களுக்கும், அரசாங்கத்தில் புத்தகங்கள் வாங்கும் துறைகள் அனைத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.
 • நாங்கள் அனுப்பும் கிறிறி மூலம் தாங்களே தங்கள் புத்தகங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். புதிய பதிப்பின் விலையை மாற்றும் போதும்(புதிய பதிப்பின்போது மட்டும்தான் விலையை மாற்ற அனுமதிக்கப்படும்), அந்தப் புத்தகத்தைப் பற்றிய மற்ற தகவல்கள், புத்தகங்கள் பற்றிய குறிப்புகளை மாற்றும் போதும் எங்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு அமைப்பின் விதிமுறைகளின்படி தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். அல்லது எங்களிடம் சொன்னால் நாங்கள் அதில் உதவுவோம்.