பங்கேற்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
 • தங்களின் புத்தகங்கள் எவ்வளவு எண்ணிக்கையில் காட்சிக்கு வைக்கப்படுகிறதோ அதற்கான தொகையை என்ற பெயரில் வங்கி வரைவோலையாகவோ, காசோலையாகவோ தரலாம். அல்லது நிர்வாகம் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் நேரடியாகவோ தங்கள் வங்கிப் பரிமாற்றம் மூலமாகவோ செலுத்த வேண்டும். தற்போது வங்கிப் பணப் பரிவர்த்தனையில் பல முறைகள் வந்து விட்டன. அதில் எவையெவையெல்லாம் பாதுகாப்பானவையோ நிர்வாக வசதிக்கு ஏற்றவையோ அவற்றின் வழியாகப் பணம் செலுத்தலாம். அவை பின்னர் தெரிவிக்கப்படும்.
 • இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தைக் கவனமாகவும் முழுமையாகவும் பூர்த்தி செய்து தாங்கள் அனுப்பி அது சரிபார்க்கப்பட்ட பிறகுதான் தங்கள் கட்டணம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நூல்கள் பதிவேற்றப்படும். பதிவேற்றப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டு (365 நாள்கள்) காலம் வரை தங்கள் நூல் இணைய தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
 • நூல்கள் பதிவேற்றப்பட்டு ஒரு வருட காலம் வரை தான் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதற்குப் பிறகு தங்கள் ஆண்டுக் கட்டணம் புதுப்பிக்கப்பட வேண்டும். கட்டணத்தைப் புதுப்பிக்க வேண்டிய காலத்திற்கு 10 நாட்களுக்கு முன்னரே தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு / செல்பேசிக்-கு / கட்செவி அஞ்சலுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும். அதைக் கவனமாகப் பார்த்துத் தங்களுக்குத் தேவை எனில் புதிப்பிக்கலாம். உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தாத நிலையில் பார்வைக்கு வைக்கப்படுவது நிறுத்தப்படும். ஆகவே இந்த விஷயத்தில் மிகவும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டுகிறோம்.
 • இந்த வலை தளம் பிரத்யேகமாகப் புத்தக வெளியீட்டாளர்கள் தங்கள் வெளியீடுகளை சந்தைப்படுத்துவதற்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தங்கள் சொந்த வெளியீடுகளைப் பார்வைக்கு வைக்க மட்டுமே விண்ணப்பியுங்கள்.
 • மற்றவர்கள் புத்தகங்களைத் தாங்கள் பார்வைக்கு வைக்க விண்ணப்பிக்க விரும்பினால் அந்தப் பதிப்பாளர்கள் ஆட்சேபம் செய்தால் அவை உடனே நீக்கப்படும். இந்த இக்கட்டைத் தவிர்க்க தாங்கள் அவர்களிடம் அனுமதி பெற்று விண்ணப்பியுங்கள். அத்தோடு அவர்கள் ஆட்சேபித்தாலும், சட்ட சிக்கல் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் பார்வைக்கு வைக்கப்படும் புத்தகங்களைத் தொடர்ந்து வலை தளத்தில் இடம் பெறச செய்ய முடியாத நிலை ஏற்படும்போது அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத்தைத் திருப்பித்தர இயலாது.
 • சட்டத்திற்கு விரோதமான தடை செய்யப்பட்ட, காப்புரிமை போன்ற பிரச்னை களுக்குரிய புத்தகங்களை இந்த வலை தளத்தில் காட்சிக்கு வைக்க வேண்டாம். அதனால் ஏற்படும் சட்டச் சிக்கல்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அதற்கான பொறுப்பு முழுவதும் தங்களைச் சார்ந்தது.
 • ஒருமுறை பார்வைக்கு வைப்பதற்குக் கட்டணம் செலுத்தப்பட்டு கொடுத்த புத்தகங்கள் விற்றுத் தீர்ந்து அல்லது தங்களால் உடனடியாக அச்சிட முடியாத புத்தகங்கள் அச்சிலில்லை என்ற குறிப்புடன் அது பார்வையில் இருக்கும். தாங்கள் தெரிவித்தால் அதை வலை தளத்திலிருந்து எடுத்து விடுவோம். ஆனால் அதற்குப் பதில் வேறொரு புத்தகத்தைப் பார்வைக்கு வைக்க முடியாது.
 • மறுபதிப்பின்போது புத்தகத்தின் விலை, மேலட்டை போன்றவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் செய்து கொள்ளலாம். அதற்குத் தனிக்கட்டணம் கிடையாது.
 • புத்தகங்கள் விலை ஒட்டப்பட்டோ, அல்லது விலை அச்சிடப்படாமலோ இருக்கக்கூடாது. அதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அமைப்பு பொறுப் பேற்காது.
 • இதில் பட்டியலிடப்படும் புத்தகங்களுக்கு கட்டாயம் 10% கழிவு தர வேண்டும். அதற்கு மேல் கழிவு தர அனுமதியில்லை.
 • குழு முடிவு செய்து சில நேரங்களில் தள்ளுபடி விற்பனைக்கென்று ஒரு குறிப்பிட்ட நாட்களை முடிவு செய்யும். அந்த நேரங்களில் மட்டும் தாங்கள் அதிக கழிவிற்கு விற்பனை செய்யலாம்.
 • புத்தகத்தின் மேலட்டையின் படத் (மினீணீரீமீ) நாங்கள் குறிப்பிடும் தர அளவு (ஸிமீsஷீறீutவீஷீஸீ)க்குள்தான் இருக்க வேண்டும்.
 • தனிப்பட்ட முறையில் வலை தளத்தில் தாங்கள் விளம்பரம் செய்ய வேண்டுமெனில் அதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.
 • பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களையோ தாங்கள் பதிப்புரிமை மற்றும் விற்பனை உரிமை பெற்ற புத்தகங்களையோ வலை தளத்தில் காட்சிக்கு வைக்கலாம்.
 • கட்டணங்கள் தாங்கள் கொடுக்கும் புத்தகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்படும். அது 0 முதல் 50, 51 முதல் 100, 101 முதல் 200, 201 முதல் 300, 301 முதல் 400, 401 முதல் 500, 501 முதல் 600, 601 முதல் 750, 751 முதல் 1000, 1001 முதல் 1500 என்று பல பகுதிகளாகப் பிரிக்கப்படும். புத்தக எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒரு புத்தகத்திற்கான கட்டணம் குறைவாக இருக்கும் வகையில் அது இருக்கும்.
 • இந்திய மொழி நூல்களுக்கும் ஆங்கில மொழிப் புத்தகங்களுக்கும் கட்டணம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
 • தாங்கள் 301 & 400 என்ற பகுதிக்குள் இருந்து 353 புத்தகங்கள் தான் அதுவரை அளித்திருந்தால் மீதியுள்ள 47 புத்தகங்களை தங்களுக்கு என்றைக்கு வரை சந்தா இருக்கிறதோ அதுவரை கொடுக்கலாம். ஆனால் 400க்குமேல் ஒரு புத்தகத்தை சேர்க்க வேண்டுமென்றாலும் 400க்கு மேல் 500க்குள் உள்ள கட்டணத்தைத்தான் தாங்கள் கட்ட வேண்டி வரும்.
 • ஒரு சில பிரதிகள் மட்டும் அச்சிட்டு வைத்துக் கொண்டு வாசகர்கள் கேட்கும்போது பிரதிகள் கைவசம் இல்லை என்று சொல்வதைத் தவிருங்கள். ஏனென்றால் இதனால் இந்த அமைப்பின் மீதும் அதன் செயல்பாட்டின்மீதும் வாசகர்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படும். தாங்கள் தொடர்ந்து அப்படிச் செய்தால் தங்கள் வெளியீடுகள் அச்சிலில்லை என்ற குறிப்புடன்தான் அதற்குப் பிறகு வலை தளத்தில் காணப்படும்.
 • சிலர் விற்பனைபற்றிக் கவலைப்படாது தாங்கள் எழுதிய புத்தகங்கள் அல்லது தங்கள் நிறுவனப் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தாலே போதும் என நினைக்கலாம். அவர்கள் இந்தத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க வேண்டாம்.
 • இவர்கள் நிர்வாகம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி இதே வலை தளத்தில் விளம்பரம் செய்யலாம்.
 • விலை அச்சிடப்படாத, விலை ஒட்டப்பட்ட புத்தகங்கள் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது.
 • விலைகள் இந்திய நாணய மதிப்பில்தான் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
 • வெளியீட்டாளர்கள் அல்லாதவர்கள் புத்தகங்களைப் பார்வைக்கு வைக்கும்போது முடிந்தவரை சமீபத்தில் வெளிவந்த புத்தகங்களைப் பார்வைக்கு வைக்கவும்.
 • வெளிச் சந்தையில் ஒரு வெளியீட்டாளர் அல்லது விற்பனையாளர் விற்கும் ஒரு புத்தகத்தை வலை தளத்தில் அதைவிடக் குறைந்த விலைக்கு விற்க அனுமதியில்லை. அப்படி விற்கப்படுவது குறித்து புகார் வந்தால் அந்தப் புத்தகம் இருப்பு இல்லை என்றே குறிக்கப்படும்.